search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்திருட்டு வழக்கு"

    மகாராஷ்டிர மாநிலத்தில் மின்சாரம் திருடிய தொழிலதிபருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. #PowerTheftCase
    தானே:

    மகாராஷ்டிர மாநிலத்தில் மின்திருட்டை தடுக்கும் வகையில் மின்வாரிய பறக்கும் படையினர் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். அவ்வகையில் கடந்த 2004ம் ஆண்டு பிவண்டி தாலுகா காரிவலி பகுதியில் உள்ள விசைத்தறி தொழிற்சாலையில் சோதனை நடத்தப்பட்டதில் மின்திருட்டு கண்டறியப்பட்டது.

    மின் மீட்டரை சேதப்படுத்தி, அதன்மூலம் 64802 யூனிட் மின்சாரத்தை முறைகேடாக விசைத்தறி தொழிற்சாலைக்கு பயன்படுத்தியது தெரியவந்தது. திருடப்பட்ட மின்சாரத்தின் மதிப்பு ரூ.2 லட்சத்து 99 ஆயிரத்து 700 ஆகும்.



    இதுதொடர்பாக தொழிற்சாலை உரிமையாளர் காண்டிலால் அம்ருத்லால் ஹரியா மீது மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 14 ஆண்டுகளாக நீடித்த இந்த வழக்கின், வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், மின்திருட்டில் ஈடுபட்ட தொழிலதிபர் காண்டிலாலுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தார். மேலும் 9 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். #PowerTheftCase
    ×